இந்திய சினிமாவை மட்டுமில்லாமல் உலக சினிமாவையே மூக்கின் மேல் கை வைக்க வைத்த படம் தான் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி. இரு பாகங்களாக வெளிவந்த இப்படம் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. குறிப்பாக முதல் பாகம் முதலில் யாராலும் கவனிக்கப்படவில்லை. அதை அதன் இசை வெளியீட்டு விழாவினை பார்த்தால் தெரியும் .

இத்தகைய மாபெரும் படைப்பின் தொடர்ச்சி மீண்டும் நீளுமா என எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக ராஜமௌலி அடுத்த படமாக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்-யை வைத்து ஒரு அரசியல் பின்னணி கொண்ட படத்தை எடுக்க சென்றுவிட்டார்.

ஆனால் தற்போது ஏமாந்த ரசிகர்களுக்கு குஷி அளிக்கும் விதமாக மீண்டும் பாகுபலி கதையை எடுக்க போகிறாரம், ராஜமௌலி. தொடர்ச்சி என்றால் கடைசி பாகத்தின் தொடர்ச்சியைத்தான் எடுப்பார்கள். ஆனால் இங்கே தான் ராஜமௌலி வித்தியாசம் காட்டுகிறார்.

அதாவது பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஏற்றிருந்த சிவகாமி மற்றும் கட்டப்பா கதாபாத்திரங்களின் முந்தைய கதையை கூறப் போகிறாராம். மேலும் ராஜமௌலியுடன் இணைந்து தேவகட்டா என்பவரும் இயக்கவுள்ள இப்படம் மூன்று பாகங்களாக உருவாகிறதாம். இதனால் எப்படியோ 6,7 வருஷத்துக்கு உற்சாகத்தில் திளைக்கப் போகிறோம் என்பது மட்டும் உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here