பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போதெல்லாம் டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்கள் செய்யும் லீலைகள் சிலருக்கும் அய்யோ என அதிருப்தியாக்கியுள்ளது.

இந்நிலையில் திருடன் போலிஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு கொடுமையும் கூத்துமாக இருக்கிறது என பலரையும் சொல்லவைத்திருக்கிறது. எந்நேரமும் விவாதமும், கூச்சலாக இருக்கிறது.

மஹத், மும்தாஜ், சென்ட்ராயன் என மூவரும் போலிஸ். ஐஸ்வர்யா, டேனியல், யாஷிகா மூவரும் திருடர்கள். மற்றவர்கள் பொது மக்கள் என நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் டாஸ்க்கில் யாரும் சரியாக பங்கேற்கவில்லை என பிக்பாஸ் குற்றம் சாட்டினார். அத்துடன் திருடர்கள் அணிடம் அவரிடம் பாராட்டை பெற்றது.

மேலும் பொறுப்பை சரிவர கவனிக்காமல், மற்றவர்கள் பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை பின்பற்றாமல் போனதற்காக இந்த வார தலைவியாக இருந்த ரம்யா நீக்கப்பட்டார்.

மேலும் அடுத்தவார எலிமினேஷனுக்கு நேரடியாக பிக்பாஸால் முன்னிருத்தப்பட்டார். அத்துடன் இனிவரும் காலங்களில் டாஸ்கை எவர் ஒருவர் சரியாக செய்யாமல் போனாலும் அவருக்கு நேரடி நாமினேசன் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  1. இதனை தொடர்ந்து நித்யா மீண்டும் தலைவியானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here