பிக்பாஸ் இரண்டாவது சீசன் சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை.

ஏனெனில் ஓவியா போல் ஒரு கடுமையான போட்டியாளர் இந்த சீசனில் இல்லை, சண்டை, சச்சரவு தாண்டி கிளாமர் தான் இந்த பிக்பாஸில் தூக்கலாக உள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பேர் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதாக பிக்பாஸ் தரப்பே கூறியது, அப்படி பார்ப்பவர்களில் எத்தனையோ சிறுவர், சிறுமிகள் இருப்பார்கள்.

ஆனால், இதில் மஹத் ரொமான்ஸ் செய்வதை எல்லாம் காட்டுவது, அவர்கள் மோசமாக நடந்துக்கொள்வதை கட் செய்யாமல் ஒளிப்பரப்புவது என பிக்பாஸ் உச்சக்கட்ட ஆபாசத்தை எட்டுகின்றது.

மேலும், பிக்பாஸ் TRP அதிகமாகியுள்ளது என்று அவர்கள் தரப்பில் சொன்னாலும், கடந்த வாரம் டாப்-5 லிஸ்டில் கூட இது வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.