vijay ajith

தமிழ் சினிமாவில் தற்போது இளம் தலைமுறையை அதிகம் ஈர்த்த இருபெரும் நடிகர்கள் என்றால் அது அஜித், விஜய் தான். இருவரும் நல்ல நண்பர்கள். குடும்ப உறவுகள் போல தான் இருப்பார்கள். ஆனால் இது தெரிவதில்லை.

இது தெரியாமல் சிலர் மாறி வார்த்தை வன்முறைகளில் இறங்கி சமூகவலைதளங்களையே நாசம் செய்து விடுகின்றனர். அவர்கள் இருவரின் படங்களும் ஒப்பிட்டு பேசப்பட்டும்.

இதில் கடந்த வருட இறுதியில் தீபாவளி ஸ்பெஷலாக சர்கார் வந்தது. அதே நேரத்தில் வரவேண்டிய விஸ்வாசம் சினிமா ஸ்டிரைக்கால் ஷூட்டிங் தடைபட்டு காலதாமதமாகி பொங்கல் பண்டிகைக்கு வந்துவிட்டது.

இரு படங்களை ஒப்பிடுகையில் சர்கார் தன்னுடைய சாதனையை தக்கவைத்து அதிக பிடித்துள்ளது. ஆனால் அண்மையில் வந்த விஸ்வாசம் பிந்திய நிலையில் தான் இருக்கின்றது.

மேலும் கடந்த 2014 ல் ஜனவரி 10 அன்று விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் என இரு படங்களும் பொங்கல் ஸ்பெஷலாக வந்தன. இதில் இரு படங்களையும் ஒப்பிடுகையில் தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸில் ஜில்லா ரூ 7 கோடியை வசூல் செய்தது. அதற்கு அடுத்தபடியாக அஜித் நடித்த வீரம் படம் ரூ 6.5 கோடிகளை பெற்றுள்ளது.